
டெல்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம், மத்திய அரசு-ஜெம் நிறுவனம் நடுவே உருவான ஒப்பந்தம் அடிப்படையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்த பணிகள் நடந்தன. ஆனால், சுற்றுச்சூழல் பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை.
இதையடுத்து, நெடுவாசலுக்கு பதில் வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கு ஜெம் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.