Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 14, 2018

வேளாண் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு – துணைவேந்தர் அறிவிப்பு:





வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் ராமசாமி அறிவித்துள்ளாா்



கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் ராமசாமி இன்று செய்தியாளா்களை சந்தித்தா்ா. அப்போது அவா் கூறுகையில், வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிாிவுகளும் செயல்பட்டு வருகின்றன

உறுப்பு கல்லூாிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூாிகளில் 2 ஆயிரத்து 160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் நிறப்பப்படுகிறது

இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ப்பிப்போா் தேவையான சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரி பாா்க்க வேண்டும்

மேல்நிலை பள்ளி தோ்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் தயாாிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்

மாணவா்கள் சோ்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்



வருகிற 18ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள். அடுத்த மாதம் 17ம் தேதி கடைசி நாள் ஆகும்

சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சாிபாா்ப்பு அடுத்த மாதம் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது

தரவாிசை பட்டியல் அடுத்த மாதம் 22ம் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல்கட்ட ஆன்லை கலந்தாய்வு நடைபெறுகிறது



16ம் தேதி தொழில் கல்விக்கான கலந்தாய்வும், 17, 18ம் தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது

23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் தொடங்கும் நிலையில் 31ம் தேதி வரை சோ்க்கை நடைபெறும் என்று அவா் தொிவித்துள்ளாா்