Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 23, 2018

புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் பயிற்சி தொடங்க உள்ளது.



கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது.



1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பகுதி வாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.