Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தனித்தனியே, வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக அரங்கில் பி.இ. தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் அன்றைய தினம் காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பி.இ. தரவரிசைப் பட்டியல்: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.
இணையதளத்திலும்: பி.இ. தரவரிசைப் பட்டியல், மாணவர்களின் பார்வைக்காக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் உடனே பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பி.இ. படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்தப் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்') கடந்த 5 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே: விண்ணப்பப் பதிவு செய்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை மையத்தில் மட்டும் மூன்று நாள்கள் கூடுதலாக ஜூன் 17-ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்த அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே, பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேருக்கு: பி.இ. படிப்பில் சேர மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்திருந்தனர். விண்ணப்பப் பதிவு செய்தவர்களில் 49,781 பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்துவிட்டனர். இதையடுத்து ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேருக்கான தரவரிசைப் பட்டியல், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக அரங்கில் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அன்றைய தினமே ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த 43,935 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் ஜூன் 11 முதல் 18 -ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு ஜூலை 1 -ஆம் தேதி முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தவுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.