Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 14, 2018

பட்டய படிப்பு படித்தால் ரூ.20 ஆயிரம் சம்பளம்'


பிளஸ் 2 முடித்தவுடனே, வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையை உருவாக்க உள்ளோம். 



பட்டயப் படிப்பு முடித்தால், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவோம்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.பள்ளிக்கல்வித் துறை மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சியின் துவக்க விழா, ஈரோடு, கோபியில் நேற்று நடந்தது.

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:இந்திய அளவில், 2.85 லட்சம் பேர் தான், பட்டயக் கணக்காளராக உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஜி.எஸ்.டி., வரி மற்றும் அனைத்து தொழிலுக்கும், பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுவர்.



இதை கருத்தில் கொண்டு தான், இந்த அரசு, பிளஸ் 2 முடித்தவுடனே, தங்கும் மற்றும் உணவு வசதியுடன், 15 நாட்களுக்கு இந்த, சி.ஏ., பயிற்சியை அளிக்கிறது. இதற்காக, 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இதற்கு முன், 3,019 பேருக்கு, 'நீட்' தேர்வு பயிற்சி அளித்தோம். அவற்றில், 1,412 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தாண்டு, பிளஸ் 2க்கும், புதிய பாடத் திட்டம் கொண்டு வர இருக்கிறோம்.படித்தவுடனே வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வியாக மாற்றி அமைக்கப்படும்.இந்தியாவில், பொறியியல் படிப்பை முடித்து, 80 லட்சம் பேர், வேலை இல்லாமல் உள்ளனர்.




தமிழகத்தில், 1.60 லட்சம் பேர், வேலையின்றி தடுமாறி வருகின்றனர்.இதை மனதில் கொண்டு, பிளஸ் 2 முடித்தவுடனேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையை உருவாக்க உள்ளோம். பட்டயப் படிப்பு முடித்தால், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.