Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 25, 2018

ஈடிணையற்ற பசிபிக் பெருங்கடல்



உலகின் மாபெரும் கடலான பசிபிக் பெருங்கடல் குறித்த சுவாரஸ்யமான குறிப்புகள்:
1. “பசிபிக்” என்ற பெயர் லத்தீன் சொல்லான “Pace” (அமைதி என்று அர்த்தம்) என்பதிலிருந்து தோன்றியிருக்கிறது.



2. உலகிலுள்ள செயல்படும் எரிமலைகளில் ஏறத்தாழ 75% பசிபிக் பெருங்கடலில் இருக்கின்றன.

3. பசிபிக் பெருங்கடல் கனடா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்ஸிகோ உட்பட 55 நாடுகளின் எல்லைகளில் இருக்கிறது.

4. உலகிலேயே மிகவும் ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில்தான் இருக்கிறது. Marianas Trench என்ற பகுதியின் ஆழம் 11,034 மீட்டர்!

5. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 25,000முதல் 30,000வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சரியான எண்ணிக்கை இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், இப்போதுவரை புதிய புதிய தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

6. உலகிலேயே மிகப் பெரிய கடற்பரப்பு, பசிபிக் பெருங்கடல்தான். அதன் மொத்த பரப்பளவு, 65,436,200 சதுர மைல்கள்!

7. உலகம் உட்கொள்ளும் மீனில் 60% பசிபிக் பெருங்கடலில் இருந்தே வருகிறது!

8. பசிபிக் பெருங்கடல் ஐந்து கண்டங்களைத் தொடுகிறது: அண்டார்ட்டிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா.



9. உலகிலுள்ள கடல் நீரில் 50.1% நீர் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது.

10. பசிபிக் பெருங்கடலின் மாசு கடந்த 40 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்திருக்கிறது.

- ஆஸிஃபா