Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 25, 2018

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இன்றைய குரங்குகள் ஏன் மனிதனாவதில்லை?




குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இன்றைய குரங்குகள் ஏன் மனிதனாவதில்லை?
பிரமாதமான கேள்வி. பரிணாம வளர்ச்சியில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்வதற்குப் பல லட்சம் வருடங்கள் ஆகும். நம் கண் முன்னே ஒரு மாற்றம் மந்திரம் போட்டதுபோல் நிகழ்ந்து விடாது. 



பாலூட்டிகளைச் சேர்ந்த ஒரு குடும்பம் ப்ரைமேட். இதில் மனிதர், மனிதக் குரங்கு, பழங்கால உலகக் குரங்குளான செர்கோபிதிகோடியா, தற்கால உலகக் குரங்குகளான செபோடியே, லெமூர், டார்சியர், லாரிஸ் போன்றவை அடங்கும். சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரே மூதாதையரிடமிருந்து குரங்குகளும் மனிதனும் தோன்றுவதற்கான பரிணாமச் சங்கிலி தொடங்கிவிட்டது.

சுமார் 500 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இவற்றில் அடுத்த கட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. பல பிரிவுகள் தோன்றின. சுமார் 300 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமிநோடியே என்ற ஒரு தொகுதி பழங்கால உலகக் குரங்குகளிடமிருந்து பிரிந்துவந்தது. இந்தத் தொகுதியில்தான் மனிதக் குரங்குகளும் மனிதனும் உருவானார்கள். சுமார் 32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மனிதனை நினைவுப்படுத்தும் லூசி என்ற பெண்ணின் எலும்புகள் கிடைத்துள்ளன.



இன்றைய மனிதன் உருவாக எவ்வளவு லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கின்றன பார்த்தீர்களா? எதிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தானோ, அந்த உயிரினம் அழிந்துவிட்டது. அதனால் இன்றைய குரங்குகள் மனிதனாகும் சாத்தியம் இல்லை.