Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

CEO, DEO- ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்ட தகவல்கள்!!


வியாழன் (16/8/18)அன்று சென்னையில் CEO, DEO- ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில்,

CEO அவர்கள் BEO அனைவருக்கும் வழங்கிய அறிவுரை :

இக்கல்வியாண்டிற்குள் 6-8 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியரும், கட்டாயம் தமிழில் படிக்க, எழுத தெரிய வேண்டும்.



இந்த இலக்கினை நிறைவேற்றும் பொருட்டு:
  1. தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க தெரியாதவர்கள்
  2. தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்க தெரிந்து, எழுத்துக் கூட்டி தமிழ் வாசிக்க தெரிந்தவர்கள்
  3. தமிழ் சரளமாக வாசிக்கத் தெரிந்தவர்கள் 
என மூன்று வகையாக, சரியாக , பெயர்ப்பட்டியல், பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும்,வரும் திங்கள் கிழமை அன்றே தயார் செய்திட வேண்டும்.

பட்டியல்1,2 க்கு ஏற்றவாறு அனைத்து ஆசிரியர்களும் கூட்டுப் பொறுப்புடன்,குறை தீர் நடவடிக்கை மேற்கொண்டு வரும் அக்டோபர் மாதத்திற்குள், முன்னேற்றம் காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேற்கண்டவாறு 3 வகைப் பட்டியல்களை,
BRT, Supervisor,BEO,DEO,CEO ஆகியோர் ஆய்வு செய்து இறுதி செய்வர். (செவ்வாய் முதல்)