Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 19, 2018

தொலைநிலை படிப்புகள் நடத்த பல்கலைகளுக்கு புது கட்டுப்பாடு


தொலைநிலை கல்வியில் படிப்புகளை நடத்த, பல்கலைகளுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொலைநிலை கல்வியில், பல பல்கலைகள், விதிகளை மீறியும், சரியான உள் கட்டமைப்பு வசதி இன்றியும், படிப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.



இதையடுத்து, சீர்திருத்த நடவடிக்கைகளை, பல்கலை கழக மானிய  குழுவான, யு.ஜி.சி., மேற்கொண்டுள்ளது.

அதனால், இந்த கல்வி ஆண்டில்,தொலைநிலை கல்வியில் படிப்பை நடத்துவதற்கான அனுமதி, பலபல்கலைகளுக்கு, ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், சில குறிப்பிட்டபாடங்களுக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.

இந்நிலையில், தொலைநிலை கல்வியில் படிப்புகளை நடத்துவதற்கு, யு.ஜி.சி., புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

*அதன் விபரம்*



தொலைநிலை கல்வியில் படிப்புகளை நடத்தும் பல்கலைகள், 'நாக்' அமைப்பின் 3.26 அல்லது 4 அளவிலான குறியீடுகளை பெற வேண்டும்.

2019 - 2020ம் கல்வி ஆண்டுக்குள், இந்த இலக்கை அடையாவிட்டால், தொலைநிலை கல்வி நடத்த அங்கீகாரம் கிடைக்காது.

திறந்தநிலை பல்கலைகள், 'நாக்' அங்கீகாரம் பெறும் நிலையை ஓராண்டுக்குள் எட்ட வேண்டும். சுயநிதி நிகர்நிலை பல்கலைகள், அவர்களுக்கான விதியை பின்பற்றி, தொலைநிலை படிப்பு நடத்தலாம்.

படிப்பு மையங்களின் கண்காணிப்பாளர் பதவியில், குறைந்த பட்சம், உதவி பேராசிரியர்கள் அந்தஸ்தில் உள்ளவர் பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.