Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 9, 2018

துணை மருத்துவப் படிப்புகள்: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்


பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்.10) தொடங்க உள்ளது.



பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி (இயன்முறை மருத்துவம்), பிஓடி உள்ளிட்ட 15 படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 12,000-த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி இந்தப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 

இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செப்டம்பர் 10-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 



இது தவிர, www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அலுவலகத்துக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.