Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 20, 2018

புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம்; தேர்வு முறையில் வருகிறது மாற்றம்






உயர் கல்வி தேர்வுகளில், புத்தகத்தை பார்த்து பதில் எழுதும் முறை உள்ளிட்ட, புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான வரைவு அறிக்கையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையில், வல்லுனர் குழுவை, ஜூனில், மத்திய அரசு அமைத்தது. இந்த குழு, தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை படித்து, அதில் உள்ள அம்சங்களை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து, கல்வியாளர்கள், பொது மக்கள், cflougc@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு,வரும், 24ம் தேதிக்குள், கருத்து தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.




வரைவு அறிக்கையின்படி, மாணவர்களின் கூர்ந்தாய்வு, செயல் முறை, உடனடி முடிவு எடுக்கும் ஆற்றல், ஆழ்ந்த ஆய்வறிவு என, பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில், தேர்வுகள் நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 12 வகையான தேர்வு சீர்திருத்தங்களை அமல்படுத்தலாம் என, வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கணினி முறை தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து பதில் எழுதுவது என, பல்வேறு வகை மாற்றங்களை, யு.ஜி.சி., வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது.