Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 9, 2018

ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நாளை துவக்கம்!


முதுகலை ஆசிரியர்களுக்கான 3 நாட்கள் 'நீட்' பயிற்சி, நாளை (செப். 10) முதல் துவங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக, 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை அரசு அளிக்கிறது. இதற்காக, முதற்கட்டமாக 412 மையங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இவற்றில், மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குதல் தொடர்பாக, முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.



நாளை முதல், செப். 12 வரையிலான முகாமில், அரசு, உதவிபெறும் பள்ளிகளின் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ள பயிற்சியில், ஒருவர்கூட விடுபடாமல் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.