Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 8, 2018

ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளி விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கக் கூடாது


ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளி விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கக் கூடாது. கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை விடுமுறை நாட்களில் பணிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 



இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும்.



அரசு விடுமுறைக் காலங்களில் அவர்கள் பணிக்கு வரப் பணிக்கப்பட்டால் அவர்களுக்கு வேறு ஒரு நாளில் ஈடுகட்டும் விடுப்பு வழங்கலாம்
இது போல ஒரு பணியாளருக்கு ஒரு ஆண்டுக்கு 10 நாட்களுக்கு மிகாமலும், மாற்றுப் வேலை செய்த 6 மாதத்துக்குள் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் வழங்கலாம். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது