Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 25, 2018

ராமச்சந்திராவில் புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்


சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திராவில் எம்எஸ்சி கிளினிக்கல் ரிசர்ச், மெடிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2018-19-ஆம் கல்வி ஆண்டு முதல் எம்எஸ்சி கிளினிக்கல் ரிசர்ச், மெடிக்கல் சைக்காலஜி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இப்படிப்புகளுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்தாக்கியல் கல்லூரிகள், உயிரிதொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்குப் பிறகு பிஹெச்டி படிக்கலாம். 

இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 6-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.sriramachandra.edu.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.