Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 10, 2018

வரலாற்றில் இன்று 10.10.2018


அக்டோபர் 10 (October 10) கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.



நிகழ்வுகள்

680 – முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு வருகிறது.
1575 – பிரான்சில் ரோமன் கத்தோலிக்கப் படைகள் புரட்டஸ்தாந்தர்களைத் தோற்கடித்தனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராக் நகரைக் கைப்பற்றினர்.
1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
1868 – கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் “லாடெமஹாகுவா” பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.
1916 – வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.
1942 – சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.
1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.



1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
1957 – ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.
1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமுல் படுத்தப்பட்டது.
1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1970 – மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.
1971 – விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.
1986 – 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர்.
1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பிறப்புகள்

1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தவர், (இ. 1884)
1906 – ஆர். கே. நாராயண், இந்திய எழுத்தாளர் (இ. 2001)
1908 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980)
1913 – கிளோட் சைமன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 2005)
1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)
1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (இ. 2008)
1936 – கெரார்டு எர்ட்டில், ஜெர்மனிய வேதியியல் அறிஞர்
1960 – வைகைப்புயல் வடிவேலு , இந்திய தமிழ் நகைச்சுவை நடிகர்

இறப்புகள்

1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு கடல் ஆராய்ச்சியாளர், நாடுகாண் பயணி (பி. 1603)
1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)
2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர், (பி. 1916)
2015 – மனோரமா (நடிகை) தமிழ் நாடக, திரைப்பட நடிகை (பி. 1937)



சிறப்பு நாள்

பீஜி – குடியரசு நாள் (1970)
தமிழீழம் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்