Breaking

Thursday, October 11, 2018

1700 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை...!!


1700 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை! நாடு முழுவதும் 1700 பள்ளிகள் மீது விதிகளை மீறியதற்காக சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்துள்ளது.



சிபிஎஸ்இயுடன் ஒரு பள்ளி இணைக்கப்படும்போதே அந்த பள்ளியில் மொத்த மாணவர் எண்ணிக்கையும் வரையறை செய்யப்பட்டு அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

சிபிஎஸ்இ விதிகளின்படி, அந்த பள்ளிகளிலுள்ள ஒரு வகுப்பில் 40 மாணவருக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விதி முறைகளை மீறும் பள்ளிகளின் சிபிஎஸ்இ அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 1700 சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 40ற்கும் மேலாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



இந்த பள்ளிகளிலுள்ள மாணவர் எண்ணிக்கையை அவர்களின் பதிவுகளின் மூலமாக கண்டறிந்த சிபிஎஸ்இ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் 40 மாணவர்களுக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ள மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.