Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 27, 2018

மருத்துவப் படிப்புகள்


மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், சண்டிகரில் இயங்கி வரும் போஸ்ட் கிராட்ஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் (பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை எம்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.





படிப்புகள்: டாக்டர் ஆப் மெடிசன் (எம்.டி.,) மற்றும் மாஸ்டர் ஆப் சர்ஜரி (எம்.எஸ்.,)

கால அளவு: மூன்று ஆண்டுகள்

துறைகள்: அனஸ்தீசியா, பயோ கெமிஸ்ட்ரி, கம்யூனிட்டி மெடிசன், டெர்மட்டாலஜி, இ.என்.டி., பார்ன்சிக் மெடிசன், இன்டர்னல் மெடிசன், மெடிக்கல் மைக்ரோபயாலஜி, நியூக்லியர் மெடிசன், ஆப்தமாலஜி, ஆர்த்தோ சர்ஜரி, பேத்தாலஜி, பீடியாட்ரிக்ஸ், பார்மகாலஜி, சைக்கியாட்ரி, ரேடியோ டயக்னாசிஸ், ரேடியோ தெரபி, ஜென்ரல் சர்ஜரி, டிரான்ஸ்பியூஷன் மெடிசன்.



தகுதிகள்: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தங்களது இளநிலை எம்.பி.பி.எஸ்., பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் முடித்திருப்பது அவசியம். மேலும் மெடிக்கல் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு 250 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடங்கிய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும். அனாடமி, பயோகெமிஸ்ட்ரி, மாலிக்குலார் பயாலஜி, டெர்மடாலஜி போன்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும். பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 2

தேர்வு நாள்: நவம்பர் 25



விபரங்களுக்கு: http://pgimer.edu.in/