Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 8, 2018

சென்னையில் இருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட இருதயம், நுரையீரல் மாற்று அறுவை அரங்கம், தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.





பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டிலேயே இருதய அறுவை சிகிச்சைப் படிப்புகளுக்காக 14 இடங்கள் கிடைக்கப் பெற்ற ஒரே மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரி தான். தமிழகத்தில் சுகாதாரத் துறையின் கீழ் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.



மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 21,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்; கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.55 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட இருதயம், நுரையீரல் மாற்று அறுவை அரங்கத்தை துவக்கி வைத்தார்.