Breaking

Thursday, October 11, 2018

விதிகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்திருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை



விதிகளை மீறி அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்த்திருக்கும்
 சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்று 1700 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒரு வகுப்புக்கான பிரிவுகளில் 40 மாணவர்கள் மட்டுமே பயிலவேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளி விவரங்களை பதிவு செய்யும் ஆன்லைன் நடைமுறை மூலம் கணக்கிட்டதில் 1700 பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளில் ஒரு வகுப்பிற்கான பிரிவுகளில் 40கும் அதிகமான மாணவர்கள் பயில்வது கண்டறியப்பட்டது. 



இந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ள சிபிஎஸ்சி ஒரு மாணவருக்கு ரூ.500 என அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.