Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 9, 2018

தண்ணீர் மூலம் இயங்கும் 'ஹைட்ரோ பைக்'... 'இளம் விஞ்ஞானி' முருகன் கண்டுபிடிப்பு!






ஒ ரு லிட்டர் தண்ணீர், சிறிது உப்பு, சோலார் பேனல் உதவியுடன் 40 கிலோமீட்டர் தூரம் வரை பைக்கில் செல்லக்கூடிய வகையில் பைக்கை கண்டுபிடித்துள்ளார் மதுரை மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன். 

பல திறமைகள் இருந்தும், பொருளாதார வசதி இல்லாமல் தன் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துவருகிறார். அவரிடம் பேசினோம்.



``நான் மதுரை அரசு ஐ.டி.ஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். எனக்குச் சிறுவயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.