Breaking

Thursday, October 11, 2018

மத்திய கல்வி நிறுவனத்தில் சேர ஜெஸ்ட் தேர்வு அறிவிப்பு!


மத்திய கல்வி நிறுவனங்களில் பி.எச்டி பட்டப் படிப்பில் சேர்வதற்கான 'ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்' என்ற தேசிய தகுதித் தேர்விற்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



2019 பிப்ரவரி 17ம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் வரும் 2018 நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

2018 ஜனவரி 20ம் தேதியன்று இத்தேர்விற்கான அனுமதிச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.jest.org.in/ -யில் வெளியிடப்படும்.

இத்தேர்வானது, இயற்பியல், கணினி அறிவியல், நரம்பியல் அல்லது உயிரியல் உள்ளிட்ட துறையில் பி.எச்டி மற்றும் இன்டர்கிரேடிடு பி.எச்டி துறைப் படிப்புகளுக்கான தேர்வாகும்.



இத்தேர்வு குறித்தான முக்கியத் தேதிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் தேதி - 2018 நவம்பர் 1 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 டிசம்பர் 15
தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்படும் தேதி - 2019 ஜனவரி 20
தேர்வு நடைபெறும் தேதி - 2019 பிப்ரவரி 17