Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 28, 2018

மாவட்ட விளையாட்டுப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு


கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்தது.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் அக்டோபர் மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். மாணவர், மாணவிகளுக்கு தனித் தனியாக தடகளம், குழுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தடகளத்தில் ஆண்களுக்கு 100மீ, 400மீ, 1,500மீ, 5,000மீ. ஓட்டம், 110மீ. தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கு 100மீ, 400மீ, 800மீ, 1,500மீ ஓட்டம், 100மீ தடைதாண்டும் ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல் ஆகியப் போட்டிகளும் நடைபெறுகின்றன. 

நீச்சலில் இரு பிரிவினருக்கும் 50 மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டர்பிளை ஸ்ட்ரோக், 200மீ தனிநபர் மெட்லி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. குழுப் போட்டியில் கையுந்துப் பந்து, கூடைப் பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. 



எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.