Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 24, 2018

250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு!


ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன.



ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். 

அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.



இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன.

இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே போல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. நீக்கம் செய்யப்படும் சந்தாதாரர்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே.
ஏர்டெலுக்கு ஏற்பட்டுள்ள சுமை:
ஏர்டெல் நிறுவனம் மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் என்ற திட்டத்தை குறைந்தபட்சமாக வைத்துள்ளது. ஆனால், சுமார் 100 மில்லியன் சந்தாதாரர்கள் மாதம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யாமல் சராசரியாக வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,200 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 2,100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவின் தற்போதைய நிலைமை:



முன்பு வோடபோனும் ஐடியாவும் தனித்தனி நிறுவனங்களாக இருந்தன. ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தற்போது இரண்டு நிறுவனங்களும் கை கோர்த்து உள்ளது. ஏர்டெலை விட வோடபோன் ஐடியா நிறுவனத்தில் தான் ரீசார்ஜே செய்யாத வாடிக்கையாளர்கள் அதிகம். இதற்கும் மாதம் 35 ரூபாய் திட்டத்திலிருந்து ரீசார்ஜ் தொடங்குகிறது. ஆனால், சுமார் 150 மில்லியன் வாடிக்கையாளரகள் 35 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யாமல் உள்ளனர். சராசரியாக 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,800 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 3,144 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்



No comments:

Post a Comment