Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 24, 2018

அண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு





கஜா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளுக்கான நாளைய (சனிக்கிழமை) தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.



கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வியாழக்கிழமை முதல் திட்டமிட்டபடி அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.

இதையடுத்து, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நிறைவடையாததைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு மட்டும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.



இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது



No comments:

Post a Comment