Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 23, 2018

வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி!


கவுன்சிலிங் போது நிரப்பப்படாத காலிப்பணியிடங்களுக்கு, முறைகேடாக டிரான்ஸ்பர் வழங்கியதால், வட மாவட்ட பள்ளிகளில், 60 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.



அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஜூன் மாதம் நடந்தது. இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட, 20 மாவட்டங்களுக்கு காண்பிக்கப்படவில்லை.

இங்குள்ள காலியிடங்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.வட மாவட்ட பள்ளிகளில் இருந்து பெரும்பாலானோர், தென்மாவட்ட பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.



இதனால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாட திட்டம் மாற்றப்பட்டதால், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த, திணறுகின்றனர்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பின்தங்கும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறுகையில்,''கவுன்சிலிங்கின் போது மறைக்கப்பட்ட இடங்களில், தற்போது ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.



முறையற்ற பணியிடமாறுதல் கண்டித்து, இருமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலியிடங்கள் நிரப்ப, தற்போது அறிவிப்பு வெளியிட்டால் தான், பிப். மாதத்திற்குள், புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியும். எனவே, மாணவர்களின் நலன்கருதி, விரைவில் டி.ஆர்.பி., மூலம், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்,'' என்றார்



No comments:

Post a Comment