Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 24, 2018

மேலடுக்கு காற்று சுழற்சியால் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்




சென்னை: வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. 



இருப்பினும், குமரிக் கடல் பகுதி முதல் வட தமிழகம் வரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 7 மாவட்டங்களில் மழை பெய்யும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வங்கக் கடலில் கடந்த 20ம் தேதி உருவான காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே நிலை கொண்டது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது.



No comments:

Post a Comment