Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 13, 2018

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் ..புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு...












புதுக்கோட்டை,நவ.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையத் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான 9 இணைப்பு பயிற்சி மையங்கள்,மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான 13 இணைப்பு பயிற்சி மையங்கள் ,மற்றும் 3 உண்டு உறைவிடப் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன..

இணைப்பு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் மற்றும் உண்டு உறைவிடப் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூர் நோக்கு பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாவட்ட திட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது..

பயிற்சியினை தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பயிலும் இணைப்பு பயிற்சி மையங்களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.. தாயுள்ளத்தோடு அம்மாணவர்களின கல்வி முன்னேற்றத்திற்கு மாவட்ட திட்ட அலுவலகத்துடன் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.



பின்னர் அம்மையங்களின் பதிவேடுதல் பராமரித்தல் மற்றும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மையத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த வசதிகளை மேற்கொள்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கி 3 உண்டு உறைவிடப் பயிற்சி மையங்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கான அனுமதி ஆணையை வழங்கினார்..

இப்பயிற்சியில் உதவி திட்ட அலுவலர் ஆர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டு மையத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.



பயிற்சியின் கருத்தாளர்களாக பொன்னமராவதி வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன்,மற்றும் பனங்குளம் வடக்கு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கருப்பையன் ஆகியோர் செயல்பட்டனர்.முடிவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment