Breaking

Saturday, November 24, 2018

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சிம்ஸ் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்


அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் மாநில அளவில் 39, 48ஆவது இடங்களை பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மைக் கல்லூரி (சிம்ஸ்) மாணவர்கள் பெற்றுள்ளனர்.





அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் 2016-2018ஆம் ஆண்டு எம்பிஏ பட்டப் படிப்புக்கான மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

இதில், பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மைக் கல்லூரி மாணவி கே.கௌதமி 39ஆவது இடமும், மௌலிகா மிருதுபாஷினி 48ஆவது இடமும் பெற்றுள்ளனர். 



சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், செயலர் பாலசுப்பிரமணியம், இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டினர். இந்தக் கல்லூரி, தொடர்ந்து 5 வருடங்களாக தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment