Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 24, 2018

School Morning Prayer Activities - 24.11..2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.



உரை:

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

A good face needs no paints
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை

பொன்மொழி:

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
-ஜெபர்சன்.



இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :
1.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16

2.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4

நீதிக்கதை :

சிங்கத் தோல் போர்த்திய கழுதை
(The Donkey in The Lion's Skin)


அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.

அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.



கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.

மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.

“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.



கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.

நீதி: நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

இன்றைய செய்தி துளிகள் :


1.'கஜா' புயலில் 500 பள்ளிகள் சேதம்

2.புயலால் 31 லட்சம் தென்னைகள் சாய்ந்தன .... புதிய தென்னைநடவு செய்ய 3 ஆண்டு ஆகும்

3.நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளைய அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

4.ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம்



5.இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

No comments:

Post a Comment