Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 23, 2018

கஜா புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழையின் காரணமாக TNPSC தேர்வு ஒத்திவைப்பு






கஜா புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழை காரணமாக சனிக்கிழமையன்று (நவம்பர் 24) நடைபெற இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கஜா புயல் பாதிப்பு, தொடர் மழை காரணமாக சனிக்கிழமை நடத்தப்பட இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கான இளநிலை ஆய்வாளர் பதவிக்கு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் இப்போது நவம்பர் 28 வரை நீட்டிக்கப்படுகிறது.




இந்தத் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளும் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment