Breaking

Tuesday, December 11, 2018

பள்ளியில் தண்ணீரின் தரம் இணையதளத்தில் பதிவேற்றம்


மத்திய அரசின் இணையதளத்தில், 15 அரசுப்பள்ளிகள், தண்ணீரின் தர அளவீட்டை, பதிவேற்றம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் நினைவாக, மத்திய அரசு, தண்ணீர் பரிசோதிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தது.பள்ளி அறிவியல் புத்தகத்தில், துாய தண்ணீரை அடையாளம்காண்பதற்கான, சோதனை முறைகள் உள்ளன.







இதை செயல்வழியில் மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை,மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில், பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.கோவையில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், இத்திட்டத்துக்கான செயல்விளக்கம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. 

தண்ணீரின் தரத்தை மாணவர்களை கொண்டு பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நுரை மிதப்பு முறை, தண்ணீரின் பி.எச்., தன்மை, உப்பு தன்மை ஆகிய மூன்று முறைகளில், சோதித்து கிடைக்கும் முடிவுகள், பதிவேற்றப்பட்டுள்ளன.இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள, ஆலோசனை நடப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment