Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 11, 2018

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள்






பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள சிலுவைப் பூக்கள்.

கொடைக்கானலில் சிலுவைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகை, குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் வழி, எம்.எம்.தெரு, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலுவைப் பூக்கள் பூத்துள்ளன. கொடைக்கானல் பகுதியிலுள்ள தனியார் தோட்டங்களிலும் அதிக அளவில் இந்தப் பூக்களை வளர்த்து வருகின்றனர். 



ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே பூக்கும் தன்மை உடைய இந்த பூவானது சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு வண்ணங்களில் காணப்படும். கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்பது போல்பூத்துள்ள சிலுவைப் பூவை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.



No comments:

Post a Comment