சென்னையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்துவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது,தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை கொண்டு தற்காலிகமாக நிரப்ப முடிவு செய்துள்ளோம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 7,500 வழங்கப்படும்.




No comments:
Post a Comment