Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 14, 2019

வரலாற்றில் இன்று 14.01.2019


ஜனவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன.



நிகழ்வுகள்

1539 – ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 – கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
1724 – ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761 – இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1814 – நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858 – பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.



1969 – ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995 – சந்திரிகா அரசு – விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
1998 – ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.



பிறப்புகள்

1920 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)
1946 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
1960 – ஜெ. வீரநாதன், தமிழக எழுத்தாளர்
1977 – நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர்

இறப்புகள்



1898 – லூயி கரோல் ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர் (பி. 1832)
1901 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1822)
1957 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)
1978 – கியோடல், ஆஸ்திரிய அமெரிக்க, கணித, மெய்யியல் அறிஞர் (பி. 1906)
2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)

சிறப்பு நாள்

தைப்பொங்கல் – தமிழர் திருநாள் (ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)
தமிழ்ப் புத்தாண்டு (2008 ஆம் ஆண்டிலிருந்து: ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)