இளநிலை, முதுநிலை படிப்புகளுக் கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பருவத் தேர்வு முடிவுகள் இன்று (4-ம் தேதி) வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் www.ideunom.ac.in, www.unom.ac.in மற்றும் http://egovernance.unom.ac.in ஆகிய பல்கலைக்கழக இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர வினாத்தாள் மறுப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் பிப்ரவரி 6 முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வினாத்தாள் மறுமதிப்பீடு செய்ய முதுநிலை பட்டதாரிகள் ரூ.1,000 மற்றும் இளநிலை பட்டதாரிகள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், மறுகூட்டலுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரி மாணவர்கள் கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்தினால் போதுமானது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


