Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 3, 2019

எங்கள் பள்ளியில்... உங்கள் புத்தகம்! மனதை தொடும் மாநகராட்சிப்பள்ளி: தனியார் பள்ளியை மிஞ்சிவிடும் செயல்திட்டத்திற்கு, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிக வரவேற்பு


கோவை:புதிய நூலகத்துக்கு, பொதுமக்களிடம் புத்தகங்கள் திரட்டும் வகையில்,'எங்கள் பள்ளியில் உங்கள் புத்தகம்' என்ற தலைப்பில், மசக்காளிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சமூக ஊடகங்களில், விளம்பரப்படுத்தி வருகிறது.



மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 140 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் வகுப்பு கையாள்கின்றனர்.
வார நாட்களில், யோகா, கராத்தே, அபாகஸ், ஓரிகாமி, பறை இசை என, ஐந்து நாட்களுக்கு, மாலைநேர சிறப்பு வகுப்புகளும், வாரந்தோறும் சனிக்கிழமையன்று, நடனப்பயிற்சி, பாரம்பரிய விளையாட்டு, பொம்மலாட்டம் தொடர்பான, இலவச பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தனியார் பள்ளியை மிஞ்சிவிடும் இவர்களின் செயல்திட்டத்திற்கு, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.



நூலகம் அமைக்க திட்டம்மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனை ஊக்குவிக்க, வீட்டிற்கு புத்தகம் எடுத்து செல்லும் வகையில், பிரத்யேக நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஆயிரத்து 500 புத்தகங்கள் வரையுள்ள, நூலகம் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. பள்ளியில், 400 புத்தகங்கள் உள்ளதால், சிறுவர்கள் படிக்கும் வகையிலான புத்தகங்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் தந்து உதவுமாறு, சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது.



உங்கள் அலமாரியில், தூசிப்படிந்த புத்தகங்கள், மாணவர்களின் கைகளை தழுவட்டுமே!அழைத்தால் போதும்!'எங்கள் பள்ளியில் உங்கள் புத்தகம்' என்ற தலைப்பில், வலம் வரும் இந்த விளம்பரத்தில், புத்தக பராமரிப்புக்கு நாங்கள் கியாரன்டி என, கையை உயர்த்தும், எமோஜி இடம்பெற்றுள்ளது. கூடுதல் தகவலுக்கு, 98428 26833 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.