Search This Blog

Thursday, February 21, 2019

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் தேர்வு

0 comments
தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:
கால்நடை பராமரிப்பு உதவி யாளர் பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்ட நிலையில், இதற்கான நேர்காணல் தேர்வு தர்மபுரி அடுத்த, செந்தில்நகர் கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில், வரும், 22 முதல், 28 வரை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை பணிக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள நபர்கள் பங்கேற்கலாம்.


நேர்முக தேர்வுக்கு பங்கேற்பவர்களுக்கு, அழைப்பானை அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள நபர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். நேர்முக தேர்வுக்கு அழைப்பானை வரப்பெறாதவர்கள், இன்றும், நாளையும் கால்நடை பெருமருத்துமனை, தர்மபுரி மாவட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில், தாங்கள் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்களுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.