Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 3, 2019

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எங்களை ஆளுங்கட்சி திரும்பி பார்க்கும் வகையில் அதிரடி முடிவெடுப்போம்: சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டத்தில் தீர்மானம்


கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை திரும்பி பார்க்கும் வகையில் எங்கள் முடிவு இருக்கும் என்று சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் மு.வரதரராஜன் தலைமை தாங்கினார். வீரமுத்து வரவேற்றார்.



இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், எம்.ஜி.கண்ணன், ஏ.பி.பெரியசாமி, எம்.நடராஜன், ஆர்.பாண்டியன், து.ஆறுமுகம், ஏ.மணி, வேல்துரை பாண்டியன், பானு, கிருத்திகா, குப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பிறகு வரதராஜன் பேசியதாவது: சத்துணவு, அங்கன்வாடிகளில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்கள், ஓய்வு பெற்ற பிறகு பெறக்கூடிய ஓய்வூதிய தொகை 2000 என்பதை மாற்றி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,5000 வழங்கிட வேண்டும். அதையும் அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.



பிற துறைகளில் பணியில் சேர்ந்துள்ளவர்களும் சமூக நலத்துறையில் பதவி உயர்வு என்ற பெயரில் சமூக விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர், தொகுதி மேற்பார்வையாளர் (கிரேடு 1, கிரேடு 2) ஆக பொறுப்பேற்ற ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியமே இல்லாமல் தள்ளாத வயதில் தள்ளுவண்டியில் தக்காளி வியாபாரம் செய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கடந்த கால ஊதிய குழுவிலே ஒரே ஊதியம் பெற்ற ஊராட்சி உதவியாளர்களுக்கு மட்டும் பதிவுதுறை எழுத்தருக்கான அடிப்படை ஊதியம் அரசு அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞர் பள்ளி சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அறிவித்தார். ஆனால், இன்று வரை அது கிணற்றில் போட்ட கல்லாய் உள்ளது.



பணி சுமையை கருத்தில் கொண்டு சிறப்பு ஊதியம் வழங்க கோரி வருகிற 17ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். எங்களுடைய போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் மவுன புரட்சியை மேற்கொள்வோம். பாராமுகமாக இருந்தால் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் ஆளுகின்ற கட்சி மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளுமே எங்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு எங்களது கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கும்