Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 19, 2019

வரலாற்றில் இன்று 19.03.2019


மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 79 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.
1861 – நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.
1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
1918 – நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.


1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
2004 – தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.

பிறப்புகள்



1871 – இசுக்கோஃபீல்ட் ஹை, ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1921)
1906 – அடோல்வ் ஏச்மென், செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962)
1922 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவ வீரர் (இ. 2014)
1928 – விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)
1943 – மார்யோ மோன்டி, இத்தாலிய அரசியல்வாதி, இத்தாலியப் பிரதமர்
1948 – வின்சென்ட் வேன் டெர் பைல், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1979 – ஹேதோ துர்க்கொக்லு, துருக்கிய கூடைப்பந்து வீரர்
1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை



இறப்புக்கள்

1406 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332)
1950 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1875)
1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)
1998 – எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட், இந்திய அரசியல்வாதி, 1வது கேரள முதல்வர் (பி. 1909)
2008 – ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)
2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)