Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 20, 2019

வரலாற்றில் இன்று 20.03.2019


மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 44 – ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1602 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
1616 – சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார்.
1739 – நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.


1760 – பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.
1861 – மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
1916 – அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
1934 – ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1942 – மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.
1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.


1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
1974 – லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

கிமு 43 – ஆவிட், உரோமப் புலவர் (இ. 17)
1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன், பிரெஞ்சுப் பேரரசன் (இ. 1832)


1828 – ஹென்ரிக் இப்சன் நார்வே நாட்டவர், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் (இ. 1906)
1951 – மதன் லால், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1957 – இசுப்பைக் லீ, அமெரிக்க நடிகர்
1966 – ஆல்கா யாக்னிக், இந்தியப் பாடகி
1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை

இறப்புக்கள்

1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1642)
1925 – கர்சன் பிரபு, ஆங்கிலேயெ அரசியல்வாதி, 35வது இந்தியத் தலைமை ஆளுநர் (பி. 1859)
2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாள அரசியல்வாதி, நேபாளத்தின் 30வது பிரதமர் (பி. 1925)


2013 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 19வது அரசுத்தலைவர் (பி. 1929)
2014 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

சிறப்பு நாள்

பன்னாட்டு சோதிட நாள்
உலக கதை-படிக்கும் நாள்
உலக சிட்டுக்குருவிகள் நாள்