Breaking

Monday, March 18, 2019

எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறும் ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில்!


நாம் தினசரி செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதே போன்று தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் உடல் நலத்தை பாதிக்கும்.



இந்த நிலையில், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதைப் போல எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கும் செல்போன் செயலியுடன் கூடிய ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் வந்துவிட்டது எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை இந்தத் தண்ணீர் பாட்டில் பயனாளிகளுக்கு நினைவூட்டும். லண்டனில் நடந்த வித்தியாசமான தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சியில் இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. விரைவில் இவை சந்தைக்கும் வர உள்ளது.