Breaking

Tuesday, March 19, 2019

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்



தமிழகத்தில் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.



அவர் இந்த கூட்டத்தில் பேசும் போது, "மக்களின் எதிர்பார்பை, எண்ணங்களை நினைவாக்கும் வகையில் திமுக வாக்குறுதிகள் அமைந்திருக்கும்" என்றார். மேலும் இந்த வாக்குறுதிகளை உருவாக்க உழைத்த திமுகவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.



தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இணை மொழியாக்குவது, பெட்ரோல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை, சிலிண்டர் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் கூறினார்.