Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 29, 2019

தமிழ் புலவர் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்  சரியான வழிகாட்டுதல் இன்றி பட்டதாரிகள் அவதி


தமிழ் புலவர் பயிற்சி பெற்ற பட்டதாரி கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண் ணப்பிக்க முடியாததால் தவிப்பில் ஆழ்ந் துள்ளனர். தமிழக கல்வித் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படு கின்றன.

கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகள் மற்றும் முறைகேடுகளால் முடங்கிய தேர்வு வாரியத்தால், திட்டமிட்ட படி எந்த தேர்வையும் நடத்த முடிய வில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் நடப்பு ஆண்டு எஸ்சி, எஸ்டி ஆசிரியர் காலிப் பணியிடங்கள், கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இணையதள கோளாறு இதில் கணினி பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண் ணப்பப் பதிவு இப்போது நடைபெற்று வருகிறது. இணையதளக் கோளாறு காரணமாக இந்தத் தேர்வுகளுக்கு சரியாக விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் திணறி வருகின்றனர்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டமும் வெளியிடப்படவில்லை. இந்தச் சூழலில் தமிழ் புலவர் பயிற்சி பெற்ற பி.லிட் பட்டதாரிகளும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இணையத்தில் விண்ணப்பிக் கும்போதும் கல்வித் தகுதியில் விவரங் கள் நீக்கப்பட்டுள்ளதால் பி.லிட் பட்டதாரி கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்பு எண் கிடைப்பதில்லை இதுதொடர்பாக தேர்வு வாரிய பயிற்சி மையத்தின் தகவல் மையத்துக்கு (044 - 28272455, 7373008144, 7373008134) தொடர்பு கொண்டால் இணைப்பு கிடைப்ப தில்லை.

இதற்காக மாவட்டம் விட்டு பயணித்து நேரில் வந்தாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. சரியான வழி காட்டுதல்கள் இல்லாமல் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? இதற்கு தமிழக அரசு உரிய ஆவன செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.