Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 19, 2019

பாலில் நெய்யை சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!



சிறிது நெய்யை பாலில் சேர்த்து பருகிவிட்டால் போதும் உங்கள் செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்படும். வயிற்று சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பாலுடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்ல மருந்து.



மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையும் சரி மாலையும் சரி சிறிதளவு நெய்யை பாலில் கலந்து பருகி வாருங்கள். சிறிது நாட்களிலேயே மூட்டு வலியில் இருந்து உங்களுக்கு முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிடும்.
இரவு பாலுடன் சிறிதளவு நெய் சேர்த்து பருகுங்கள். உடனடியாக உங்களுக்கு வித்தியாசம் தெரியும். நன்றாக உறக்கம் வரும். மறு நாள் காலையும் உங்களுக்கு அழகானதாக இருக்கும்.



உடல் பளபளப்பாகும் பால் மற்றும் நெய் என இரண்டுமே உடல் உள்ளுறுப்புகளுக்கு மட்டும் உடல் தோற்றத்தையும் மேம்படுத்தக்கூடியதாகும். பொதுவாகவே நெய்யில் உடலின் தோல் பகுதி டிரைனஸ்சை சரி செய்யக்கூடியது. இதனுடன் பாலையும் சேர்க்கும் பட்சத்தில் உங்கள் உடலின் சருமம் பளபளப்பாகும். உங்கள் தோற்றமும் புதிய பொலிவு பெறும்.