Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 12, 2019

வரலாற்றில் இன்று 12.04.2019


ஏப்ரல் 12 கிரிகோரியன் ஆண்டின் 102 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 103 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்


1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
1832 – இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையைபிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.


1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.
1927 – ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1955 – ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
1961 – சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.


1980 – லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
1981 – முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.
1983 – பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
1996 – யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல்.
2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.




பிறப்புகள்


கிமு 599 – மகாவீர், ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர். (இ. கிமு 527)
1884 – ஓட்டோ மெயெரொஃப், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1951)
1932 – லக்ஸ்மன் கதிர்காமர், இலங்கை அரசியல்வாதி (இ. 2005)


இறப்புகள்


1945 – பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் (பி. 1882)
1971 – ஈகர் தம், நோபல் பரிசு பெற்ற உருசியர் (பி. 1895)
1997 – ஜார்ஜ் வால்ட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
2006 – ராஜ்குமார், கன்னட நடிகர் (பி. 1929)




சிறப்பு நாள்


வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்