Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 13, 2019

வரலாற்றில் இன்று 13.04.2019

ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1111 – ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.
1605 – ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.
1829 – பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.
1849 – ஹங்கேரி நாடு குடியரசானது.


1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.
1868 – பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில் அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.
1873 – ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவரும் 3 வெள்ளையினத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
1919 – ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.


1930 – மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
1939 – இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1941 – ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.


1953 – இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
1970 – அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.
1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
1975 – லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1979 – இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1984 – இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.
1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.
1997 – டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.
2006 – கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது.


2007 – பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
2012- வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.

பிறப்புகள்

1743 – தோமஸ் ஜெபர்சன், மூன்றாவது அமெரிக்க அரசுத்தலைவர் (இ. 1826)
1905 – புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)
1913 – மே. ரா. மீ. சுந்தரம்], எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)
1934 – டேம் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்மணி
1949 – கிறித்தபர் ஃகிச்சின்சு, அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர்


1960 – ரவூப் ஹக்கீம், இலங்கை முசுலிம் அரசியல்வாதி
1962 – நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
1963 – காரி காஸ்பரோவ், உருசிய சதுரங்க ஆட்டக்காரர்.
1979 – பேரன் டேவிஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்



இறப்புகள்

1918 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி (பி. 1870)
1973 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் அரசியல்வாதி, முன்னாள் பிரதமர் (பி. 1911)
2015 – கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)