Breaking

Tuesday, April 9, 2019

2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை இயக்குநரின் RTI கடித நகல்!!!


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், அந்த கல்வியாண்டின் ஜூலை மாதம் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ 5 வயது நிறைவு செய்திருந்தால் மட்டுமே, முதல் வகுப்பில் சேர்க்க முடியும் என, தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை, துணை இயக்குநர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட ஐயப்பாட்டிற்கு, எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார். ஆகவே இதை நகல் எடுத்து பள்ளியில் வைத்துக் கொண்டு, இந்த தகவலின் கீழ் செயல்படுதல் நல்லது.