Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 28, 2019

புதிய 20 ரூபாய் நோட்டு!



ரூ.20 மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடவிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
பசுமஞ்சள் நிறத்தைக் கொண்ட புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த ரூபாய் நோட்டு, 129 மி.மீ. நீளமும், 63 மி.மீ. அகலமும் கொண்டதாக இருக்கும்.
தற்போது புழக்கத்திலிருக்கும் சிவப்பு-ஆரஞ்சு நிற 20 ரூபாய் நோட்டின் நீளம் 143 மி.மீ.யாகவும், அகலம் 63 மி.மீ.யாகவும் உள்ளது.


பழைய ரூபாய் நோட்டில், அந்தமான் தீவிலுள்ள ஹாரியட் மலைப் பகுதி இடம் பெற்றுள்ள நிலையில், புதிதாக அறிமுகமாகவிருக்கும் 20 ரூபாய் நோட்டில் எல்லோரா மலைக் குகை இடம் பெற்றுள்ளது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே, வித்தியாசமான வண்ணங்களில் 10 ரூபாய், 50 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் ஆகிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது புதிய 20 ரூபாய் நோட்டும் வெளியிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.