Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 29, 2019

வரலாற்றில் இன்று 29.04.2019


ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டின் 119 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 120 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான்.
1770 – ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1882 – பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.


1903 – கனடாவின் அல்பேர்ட்டாவில் 30 மில்லியன் கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர்.
1946 – ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1970 – வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.
1975 – வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர்.
1986 – லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.


1991 – வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
1995 – நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
2005 – 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.
2007 – வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.

பிறப்புகள்

1818 – இரண்டாம் அலெக்சாண்டர், ரஷ்யாவின் பேரரசன் (இ. 1881)
1848 – ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906)
1891 – பாரதிதாசன், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் (இ. 1964)
1938 – திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2010)


1957 – மேமன்கவி, ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளி
1970 – அன்ட்ரே அகாசி, முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர்

இறப்புகள்

1843 – வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.
1980 – ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (பி. 1899)
2015 – மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
2015 – கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)

சிறப்பு நாள்

ஜப்பான் – தேசிய நாள்
அனைத்துலக நடன நாள்