Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 29, 2019

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி


கோடை விடுமுறையில், நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு, இணையதளம் வாயிலாக பட்டயப்படிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறையில் பட்டயப்படிப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக, மே, 1 முதல், இப்படிப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, ஆசிரியர்களின் விபரங்களை அளிக்க, கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.